அமெரிக்க இராணுவம் தீவிரவாத இயக்கம் – ஈரான் அறிவிப்பு!

Wednesday, January 8th, 2020

அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் பாராளுமன்றத்தில் அதிரடி தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி-யை பயங்கரவாத அமைப்பு என அமெரிக்கா நிறைவேற்றிய தீர்மானத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏப்ரல் 23, 2019 அன்று அமெரிக்காவின் மத்திய படையான CENTCOM-ஐ பயங்கரவாத அமைப்பாக ஈரான் அறிவித்து மசோதாவை நிறைவேற்றியது.

இன்று டிசம்பர் 7ஆம் திகதி, தளபதி சுலைமானியை படுகொலை செய்த அமெரிக்காவின் கொடூரமான நடவடிக்கையைத் தொடர்ந்து, இதற்கு அமெரிக்க ஜனாதிபதி பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், முந்தைய சட்டத்தை நாங்கள் மாற்றியமைக்கிறோம்.

பென்டகனின் அனைத்து உறுப்பினர்களும், தளபதிகள், முகவர்கள் மற்றும் ஜெனரல் சுலைமானியின் தியாகத்திற்கு பொறுப்பானவர்கள் அனைவரும் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்படுகிறார்கள். இதை அனைத்து ஈரானிய தேசமும் ஆதரிக்கிறது என சபாநாயகர் குறிப்பிட்டார்.

மேலும் மாற்றியமைக்கப்பட்ட சட்டத்தின் படி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஈரானின் தேசிய மேம்பாட்டு நிதியிலிருந்து ஐ.ஆர்.ஜி.சி குட்ஸ் படையினருக்கு 200 மில்லியன் டொலர்கள் வழங்கப்படும் என்றும் சபாநாயகர் லரிஜானி கூறினார்.

Related posts: