பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டுக்கு முக்கிய பங்குள்ளது – இந்திய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல் வலியுறுத்து!

Friday, December 8th, 2023

பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் CSC என்ற கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் முக்கிய பங்கை இந்திய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல் வலியுறுத்தியுள்ளார்.

மொரிஷியஸில் இடம்பெற்ற 6 ஆவது மாநாட்டில் கலந்துக்கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவுகள் ஆகியன கடல்சார் ஒத்துழைப்பு தொடர்பான முத்தரப்பு கூட்டத்தின் நோக்கத்தையும் உறுப்பினர்களையும் விரிவுபடுத்த இணங்கிய போது, 2020 இல் கொழும்பு பாதுகாப்பு மாநாடு நிறுவப்பட்டது.

இதில் இந்தியா, மாலைத்தீவுகள், மொரிஷியஸ், இலங்கை என்பன உறுப்பு நாடுகளாக உள்ளன. பங்களாதேஸ் மற்றும் சீசெல்ஸ் ஆகியவை பார்வையாளர்களாக இருக்கின்றன.

இந்நிலையில் மொரிஷியஸில் நேற்று இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் 2024ஆம் ஆண்டுக்கான நடவடிக்கைகளின் வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாதம், தீவிரவாதத்தை எதிர்த்தல், கடத்தல், நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுதல், இணைய பாதுகாப்பு, முக்கியமான உட்கட்டமைப்பு பாதுகாப்பு, மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: