மியன்மார் கலவரம் தொடர்பில் பங்களாதேஷ் பிரதமர்!

Saturday, September 23rd, 2017

மியன்மார் இனக் கலவரங்கள் முற்றாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹசீனா வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொது அமர்வில் உரையாற்றிய அவர் மியன்மாரில் இடம்பெறும் வன்செயல் காரணமாக எட்டு லட்சம் ரொஹிங்கிய அகதிகள் வெளியேறியுள்ளனர் அவர்களில் 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் கடந்த 3 வார காலப்பகுதியில் பங்களாதேஷை வந்தடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

இந்த அகதிகள் எந்த அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் பெறும் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் மதிப்புடனும் மனிதாபிமான ரீதியாகவும் மீண்டும் தமது சொந்த நாட்டை சென்றடைய சர்வதேச சமூகம் சகல ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இதேவேளைஇ மியன்மார் ராக்கின் மாகாணத்தில் இயல்பு நிலையை மீள ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மியன்மாரின் தலைவர் ஆங் ஷான் சூகி தெரிவித்துள்ளார். மியன்மார் தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

அவர்களுக்கு தேவையான நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்எப்படியிருப்பினும் ரக்கின் மாகாணத்தை சென்றடைந்த செஞ்சிலுவை சங்கத்தின் நிவாரணை படகு நூற்றுக் கணக்கான ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அவர்களை தடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரும்புக் கம்பி மற்றும் பெற்றோல் குண்டுகள் போன்ற ஆயுதங்களுடன் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர காவல்துறையினர் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றனர்.

Related posts: