கடல் பயணத்தில் ஆண்டுக்கு 3000 அகதிகள் பலி!

Wednesday, August 31st, 2016

அடுத்த சிலநாட்களுக்கு மத்தியத்தரைக் கடலில் படகுகள் பயணிக்க ஏதுவான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதால் லிபியாவிலிருந்து மேலும் பல அகதிகள் கடல் வழியாக ஐரோப்பாவை நோக்கி பயணிக்கலாம் என்று இத்தாலிய கடலோர காவற்படை தெரிவித்துள்ளது.

மிகப்பெரிய மீட்பு நடவடிக்கைகளில் ஒன்று என்று நம்பப்படும் நடவடிக்கையின் மூலம் திங்களன்று (29-08-2018) கிட்டத்தட்ட 6500 குடியேறிகள் மீட்கப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.

திங்கட்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைக்கு முன்பு வரை இத்தாலிக்கு இந்த ஆண்டில் (2016) மட்டும் 1,05,000 பேர் வந்திருப்பதாக ஐநா மன்றத்தின் அகதிகள் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

இதே காலகட்டத்தில் இத்தாலிக்கும் கிரேக்கத்துக்கும் வர முயன்று 3000 குடியேறிகள் கடலில் உயிரிழந்துள்ளனர்.

2015ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது இது 50% அதிகரிப்பு.

கடந்த சில நாட்களாக காப்பாற்றப்படும் ஆயிரக்கணக்கான குடியேறிகள் பெரும்பாலும் எரித்திரியா மற்றும் சொமாலியாவில் இருந்து வருகிறார்கள்.

விரக்தியின் விளிம்பில் இருக்கும் இவர்கள் ஐரோப்பாவில் மேம்பட்ட வாழ்வைத்தேடும் இவர்கள் லிபியா வழியாக வருகிறார்கள். லிபியா ஆட்கடத்தல் கேந்திரமாக மாறியிருக்கிறது.

இவர்கள் வரும் படகுகள் மீட்புப்படகுகள் வரும்வரை பயணிக்கத்தேவையான அளவு எரிபொருளை மட்டுமே கொண்டிருக்கின்றன.

மீட்கப்பட்ட குடியேறிகள் இத்தாலிய கரைக்கோ சிசிலிக்கோ அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கு அவர்களின் விண்ணப்பங்கள் பதியப்படும்.

Related posts: