இராணுவ ஒத்துழைப்பினை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மேம்படுத்த வேண்டும்!

Saturday, June 10th, 2017

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பாதுகாப்பிற்கு முற்று முழுதாக அமெரிக்காவின் உதவியை நம்பியிருக்க முடியாது என ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் தலைவர் ஜீன் குளோட் ஜங்கர் (Jean-Claude Juncker)தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மத்திய கிழக்கில் எமது பாதுகாப்பு விருப்பு, காலநிலை மாற்றம் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் போன்ற விடயங்களில் நாம் தனியாக செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து அவர் வலியுறுத்தியுள்ளார்

இந்த நிலையில், நேட்டோ சார்பான நாடுகள், அதன் பாதுகாப்பிற்கான நிதியினை மேலும் அதிகரிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பாக கடந்த மாதம் ஜேமன் சான்சலர் அஞ்சீலா மேர்கெல் கருத்து தெரிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் தமது பாதுகாப்பிற்கு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா மற்றும் பிருத்தானியாவினை முற்று முழுவதுமாக தங்கியிருக்கக் கூடாது என தெரிவித்திருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய பலம் வாய்ந்த சக்திகளாக பிருத்தானியாவும் பிரான்சும் விளங்குகின்றதுஇந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிருத்தானியா விலகும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவ பலம் பலவீனமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது

அதேவேளை, நேட்டோவின் பாதுகாப்பு நிதிக்கு ஒவ்வொரு நாடுகளும் தமது மொத்த வருவாயில் இருந்து 2 சதவீதத்தை ஒதுக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதுஇருப்பினும், நேட்டோவை சேர்ந்த 29 நாடுகளில், பிருத்தானியா, அமெரிக்கா, போலண்ட், கிரேக்கம் மற்றும் எஸ்ரோனியா ஆகிய நாடுகள் மட்டுமே இந்த நிபந்தனைக்கு அமைய செயல்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: