பாரிய நிலநடுக்கத்தால் குலுங்கிய சீன தலைநகர் பீஜிங்!

Tuesday, February 13th, 2018

பூமியின் நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ள சீனாவின் வட பகுதியில் அவ்வப்போது பலத்த மற்றும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சீனாவின் வட பகுதியான ஹேபேய் மாகாணத்தில் உள்ள லங்பாங் நகரை மையமாக கொண்டு பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

4.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள இந்த நில நடுக்கத்தினால் சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இதுவரையில் எந்த தகவலும் வெளியாகவில்லை.

மேலும் கடந்த 1976 ஆம் ஆண்டு சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து கிழக்கே அமைந்துள்ள தங்ஷான் பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் சுமார் 3 லட்சம் பேர்உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: