ஐ.எஸ். தீவிரவாதிகளால் புதிய படுகொலைப் பட்டியல் வெளியீடு!

Friday, June 10th, 2016

ஐ.எஸ். தீவிரவாதிகளுடன்  தொடர்பைக் கொண்ட ஐக்கிய சைபர் கலிபா அமைப்பானது  7,858  அமெரிக்கர்களை உள்ளடக்கிய புதிய படுகொலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த அமைப்பு ரஷ்யாவை அடிப்படையாகக் கொண்ட டெலிகிராம் மென்பொருளைப் பயன்படுத்தி  படுகொலைத் தாக்குதல்களுக்கு இலக்கு வைக்கப்பட்ட மொத்தம் 8,318  பேரின் பெயர்கள்,  முகவரிகள் மற்றும் இலத்திரனியல் அஞ்சல்கள் என்பவற்றை வெளியிட்டுள்ளது.

இது ஐ.எஸ். தீவிரவாதிகளால் வெளியிடப்பட்ட மிகவும் நீண்ட படுகொலைப் பட்டியல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

தமது ஆதரவாளர்கள் முஸ்லிம்களுக்காக  அந்தப் பட்டியலில்  குறிப்பிடப்பட்டவர்களைக் கொல்ல வேண்டும்   என தீவிரவாதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அந்தப் பட்டியலிலிருந்த அதிகளவானோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாகவுள்ள நிலையில்  கனடாவைச் சேர்ந்த 312  பேரும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 69  பேரும்  பிரித்தானியாவைச் சேர்ந்த 39  பேரும் பட்டியலில் உள்ளடங்கியுள்ளனர்.

அத்துடன் ஐ.எஸ். தீவிரவாதிகள்  இஸ்ரேல்,  பிரான்ஸ்,  இந்தோனேசியா,  நியூஸிலாந்து மற்றும் ஜமெய்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களையும் தாக்குதலுக்கு இலக்கு வைத்துள்ளனர்.இந்தப் படுகொலைப் பட்டியல் ஆங்கிலம் மற்றும் அரேபிய மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts: