அமெரிக்கா பிரவேசிப்போருக்கு கொவிட்-19 சான்றிதழ் அவசியமற்றது – அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் !

Saturday, June 11th, 2022

கொவிட்-19 கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது. நாளைமுதல் இவ்வாறு கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தவுள்ளதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, வேறொரு நாட்டிலிருந்து வருபவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முன்பு,கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், கொவிட்-19 தொற்று ஒழிப்பு நடவடிக்கையில் ஏற்பட்ட முன்னேற்றத்தினை கருத்திற்கொண்டு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கொவிட்19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என்ற சான்றிதழை கொண்டிருப்பது அவசியமன்று என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: