பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுங்கள்- பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அழுத்தம்!

Tuesday, September 20th, 2016

பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்று பாகிஸ்தானுக்கு மீண்டும் அமெரிக்கா அழுத்தம் கொடுத்து உள்ளது.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க் நகரில் அவர் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின்போது அவர் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பினார்.

தார்மீகக்கடமை என கருதி பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து போரிட்டு வருகிறது. பிராந்திய அமைதி, அரசியல் நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றுக்காக அண்டை நாடுகளுடன் தொடர்பில் இருந்து வருகிறேன் என ஜான் கெர்ரியிடம் நவாஸ் ஷெரீப் கூறினார்.

மேலும், காஷ்மீரில் 107 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்திருப்பதாகவும், அரசின் ஆதரவுடன் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும் ஜான் கெர்ரியிடம் நவாஸ் ஷெரீப் குற்றம்சாட்டினார். இந்தியா, பாகிஸ்தான் இரு தரப்பு பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு அமெரிக்க அரசும், நீங்களும் உதவ வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் வலியுறுத்தினார்.

இருதரப்பு சந்திப்பின் போது ஜான் கெர்ரி பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்று நவாஸ் செரீப்பை வலியுறுத்தி உள்ளார்.

காஷ்மீர் வன்முறை குறிப்பாக இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கவலை தெரிவித்த ஜான் கெர்ரி, பாகிஸ்தான் மண்ணை பயங்கரவாதிகள் பாதுகாப்பு புகழிடமாக பயன்படுத்துவதை தடுத்து நிறுத்துங்கள் என்று நவாஸ் செரீப்பை வலியுறுத்திஉள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் பேசுகையில், பயங்கரவாத குழுக்களுக்கு எதிர்க்கொள்வதில் பாகிஸ்தானிடம் இருந்து அதிமான செயல்பாட்டையே அமெரிக்கா விரும்புகிறது என்றார்.

செய்தித் தொடர்பாளர் ஜான் கெர்பே பேசுகையில், பயங்கரவாத இயக்கங்கள் பாகிஸ்தான் மண்ணை பாதுகாப்பு புகழிடமாக பயன்படுத்துவதை பாகிஸ்தான் தடுக்கவேண்டும் என்று நவாஸ் செரீப்பிடம் ஜான் கெர்ரி வலியுறுத்திஉள்ளார் என்றார். பாகிஸ்தான் பாதுகாப்பு படையின் சமீபத்திய பயங்கரவாதிகளின் வன்முறையை தடுக்கும் நடவடிக்கையை பாராட்டியதாகவும், அப்போது கெர்ரி இதனை குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ஜான் கெர்ரி காஷ்மீரில் இப்போது நடைபெற்ற வன்முறை மற்றும் இந்திய ராணுவ தலைமையகம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கவலையை தெரிவித்தனர், இருதரப்பும் பதட்டத்தை தணிக்கவேண்டும் என்றனர், என்று கெர்பே கூறிஉள்ளார்.

diesel-659965 copy

Related posts: