போராட்டத்தை அடக்கிய வியட்நாம்!

Monday, July 18th, 2016

தென் சீனக் கடலில் பெரும்பாலான கடற்பரப்பை சீனா தனக்கு சொந்தமானதாக உரிமை கொண்டாடுவதற்கு எதிராக போராட முயன்ற வியட்நாம் செயற்பாட்டாளர்கள் தலைநகர் ஹனோயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சீனா உரிமை கோருவதற்கு எவ்வித சட்ட அடிப்படையும் இல்லை என்று சர்வதேச நடுவர் நீதிமன்றம் கடந்த வாரம் ஆணை பிறப்பித்திருப்பதை தொடர்ந்து இந்த செயற்பாட்டாளர்கள் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தனர்.

சீனாவின் எல்லை கோரிக்கையை வியட்நாம் அரசு எதிர்த்தாலும், உள்நாட்டில் கருத்து வேறுபாடுகளை உருவாக்குமென அஞ்சி, இத்தகைய பொது போராட்டங்களை வழக்கமாக அடக்கி வருகிறது என பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். த ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேசத் தீர்பாயத்திற்கு எல்லை எதுவும் இல்லை என்று கூறி சீனா அந்த ஆணையை நிராகரித்துள்ளது.

Related posts: