பெரும் சோகத்தில் பிரான்ஸ்: கொரோனா தொற்றால் ஒருநாளில் 1417 பேர் உயிரிழப்பு!

Wednesday, April 8th, 2020

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஒரே நாளில் ஆயிரத்து 417 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பிரான்ஸில் மட்டும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 69 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிகளவிலான உயிரிழப்புக்களை கொண்டிருந்த இத்தாலியில் அண்மை நாட்களாக உயிரிழப்புக்கள் குறைந்துவரும் நிலையில் சில நாட்களாக பிரான்ஸில் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் ஏப்ரல் 2 -ம் திகதி ஒரேநாளில் 1,355 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து அதற்கு அடுத்த இரு நாள்களிலும் பலியானவர்களின் எண்ணிக்கை 1,000 -க்கு மேல் இருந்தது.

இந்நிலையில் ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் இந்த எண்ணிக்கை முறையே 518 மற்றும் 833 ஆக உள்ளது. இது அதிகம் என்றாலும் அதற்கு முந்தைய நாள்களை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவுதான். இனி வரும் நாள்களிலும் இந்த எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருக்கிறது என நினைத்திருக்கையில் 7ஆம் திகதி 1417 உயிரிழப்புக்கள் என புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

அனைத்தையும் முடக்கிய போதிலும் பிரான்ஸில் இவ்வாறு உயிரிழப்புக்கள் அதிகரிக்கின்றமை அந்நாட்டை நிலைகுலைய வைத்துள்ளன.

அத்துடன் இதுவரையில் உலகளவில் கொரோனா தாக்கத்திற்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 81900 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: