பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரசா மே பதவியேற்றார்!

Thursday, July 14th, 2016

பிரித்தானியாவின் புதிய பிரதமராக அந்நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்த தெரசா மேயை முடிக்குரிய ராணி எலிசபெத் அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்துள்ளார்.

இதனடிப்படையில் பிரித்தானியாவில் மார்க்கரட் தாட்சருக்குப் பின்னர் இரண்டாவது பெண் பிரதமராக தெரசா மே நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தெரசா மே, முன்னாள் பிரதமர் டேவிட் கமரூனின் செயற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

அத்துடன், தனது தலைமையிலான அரசாங்கம் சாதாரண மக்களுக்காகப் போராடும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். ஏழைகள், பெண்கள், சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக தனது அரசாங்கம் போராடும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் விட்டுச் சென்ற பணியை தாம் தொடரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்று தனது பதவி விலகல் கடிதத்தினை ராணியிடம் கையளித்த டேவிட் கமரூன் புதிய பிரதமர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றிலும் கலந்துகொண்டிருந்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

மேலும் பிரித்தானியாவை ஐரோப்பிய ஒன்றியத்துடன், நெருக்கமாக வைத்திருக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் இதன் போது கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன், இணைந்திருப்பதாக என்பது குறித்து அந்நாட்டில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், சுமார் 52 வீதமான மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என வாக்களித்திருந்த நிலையில் டேவிட் கமரூன் பதவி விலகுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)

625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)

Related posts: