அமெரிக்காவில் உள்நாட்டு போர் ஏற்பட்டால் உலகுக்கு நன்மை – செர்ஜி மார்கோவ் தெரிவிப்பு!

Saturday, January 6th, 2024


அமெரிக்காவில் ஒரு உள்நாட்டு போர் ஏற்பட்டால் உக்ரைன் – ரஷ்யா போர் ஒருவாரத்திற்குள் முடிவுக்கு வந்துவிடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய கூட்டாளியான செர்ஜி மார்கோவ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஏற்படும் போர் “உலகிற்கு நல்லது எனவும், இதன் மூலம் ரஷ்யாவிற்கு நன்மை பயக்கும் என்பதுடன், உக்ரைன் மோதலையும் முடிவுக்கு கொண்டுவரும் என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ரஷ்யா “போரை விரும்புவதில்லை,” உண்மையில் அமெரிக்காவில் ஏதாவது தொடங்கினால், உக்ரைனில் உள்நாட்டுப் போர் ஒரு வாரத்தில் முடிவுக்கு வந்துவிடும். உக்ரைன் ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் மத்தியஸ்தர்களை தேடி ஓடுவார்கள்.

‘இதற்கெல்லாம் உடனடியாக முற்றுப்புள்ளி வைப்போம்’ என்று சொல்வார்கள். புத்தாண்டில் அமைதியை விரும்புகிறோம், உக்ரைனில் வாழ்பவர்கள் அமெரிக்காவினால் திணிக்கப்பட்ட இந்த காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட விரும்புகிறோம்.

உக்ரைனில் உள்ள குடியிருப்புக் கட்டிடங்கள் மற்றும் ரஷ்ய எல்லைப் பகுதியில் வான்வழித் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 29 முதல், ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியுள்ளது, அதே நேரத்தில் ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் உக்ரைனின் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: