மாதாந்தம் 2 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் – சுற்றுலாத்துறை அமைச்சு நம்பிக்கை!

Thursday, February 17th, 2022

இலங்கைக்கு மாதாந்தம் 2 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் தனிநபர் அல்லது குடும்பமாக இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

எனினும் தற்போது சுற்றுலா குழுவாக இலங்கைவர ஆரம்பித்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.

இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 50,326 பேர் சுற்றுலா பயணிகளாக இலங்கை வந்துள்ளனர்.

இதன்படி இந்த ஆண்டு  ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 653 பேர் சுற்றுலா பயணிகளாக இலங்கை வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே 2022 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் 25 சுற்றுலா கிராமங்களை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஒவ்வொரு திட்டத்திற்கும் 10 மில்லியன் ரூபாய் செலவிடப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், 2022 ஆம் ஆண்டில் குறைந்தது 1.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:


போக்குவரத்துக்கு இடையூறாகத் திரியும் கட்டாக்காலிகள் பிடிபட்டால் இனி ஏலத்தில் விற்கப்படும்! பிரதேச ச...
ஏப்ரல் 25 இல் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் - தேசிய பாதுகாப்பு தொடர்பான ...
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான மாற்று யோசனைகளை பரிசீலிக்க தயார் - ஜனாதிபதி ரணில் விக்கிரம...