பிரான்ஸ் தேர்தலில் – இம்மானுவேல் மக்ரோன் அதிக வாக்குகளை பெற்று இரண்டாம் கட்ட தேர்தலுக்கு தகுதி!

Monday, April 24th, 2017

பிரான்ஸின் 25 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான முதல் கட்ட வாக்கு பதிவுகள் நேற்று இடம்பெற்ற நிலையில் அரசியல் பிரச்சார அனுபவமில்லாதவரும், இளம் ஜனாதிபதி வேட்பாளராகவும் போட்டியிட்ட எம்மானுவேல் மக்ரோன் அதிக வாக்குகளை பெற்று இரண்டாம் கட்ட தேர்தலுக்கு தகுதி பெற்றுள்ளார்.

பிரான்ஸின் 24ஆவது ஜனாதிபதியாகவுள்ள பிரான்கொய்ஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம், இம்மாதத்துடன் நிறைவடைவதனால் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான முதல் கட்ட வாக்குப்பதிவுகள் நேற்று இடம்பெற்ற நிலையில் சுமார் 40 வருடங்களுக்கு பிறகு மொத்த வாக்காளர்களில் சுமார் 80 சதவீதமான வாக்காளர்கள் தாமது வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

மேலும் குறித்த ஜனாதிபதி தேர்தலில் இம்மானுவேல் மக்ரோன், மரின் லி பென், பிராங்கோயிஸ் பிலான், ஜீன் மெலன் சோன் மற்றும் பெனுவா ஹமூன் உள்ளிட்ட 11 பேர் போட்டியிட்ட நிலையில், முதலாவது பெண் வேட்பாளர் மற்றும் வலதுசாரி தலைவர் மரின் லீ பென் மற்றும் லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான் ஆகியோர் அதிக வாக்குகளை பெற்றுள்ளதோடு, கடந்த 60 வருடங்களாக ஆதிக்கத்திலிருந்து இரு பாரம்பரிய கட்சிகளின் ஆதிக்கத்தை தகர்த்துள்ளனர்.

இந்நிலையில் முதல்கட்ட தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகளை பெற்ற வேட்பாளரான பிரான்கோயிஸ் பில்லான் போட்டியிலிருந்து விலகி தன்னைவிட அதிகமான வாக்குகளை பெற்ற எம்மானுவேல் மக்ரானுக்கு ஆதரவளிப்பதாக அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

இரண்டு கட்டங்களாக இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில், முதல் கட்ட வாக்குப்பதிவுகள்நேற்று இடம்பெற்ற நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுகள் எதிர்வரும் மே 7 திகதி இடம்பெறும். மேலும் அதிக ஆதரவை பெரும் வேட்பாளர் எதிர்வரும் மே 14 ஆம் திகதி பிரான்ஸின் 25ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: