இரசாயன தாக்குதல் நடத்திய இராணுவம்: அறிக்கையில் திடுக்கிடும் தகவல்!

Saturday, October 29th, 2016

சிரியா இராணுவம் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது என்ற குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது.இராணுவத்துக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதலில் அப்பாவி மக்கள் அதிகம் பலியாகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2014, 2015ம் ஆண்டுகளில் சிரியா இராணுவம் குளோரின் ரசாயனத்தை பயன்படுத்தியதாக ஐ.நா சார்பிலான விசாரணை குழு அறிக்கை வெளியிட்டது.இதனை மறுத்துள்ள சிரியா ஜனாதிபதிக்கு ஆதரவாக ரஷ்யாவும் களமிறங்கியுள்ளது.

இதுகுறித்து ஐ.நா-வுக்கான ரஷ்ய தூதர் விடாலி சுர்கின் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரசாயன ஆயுதங்களைக் கொண்டு சிரியா அரசு தாக்குதல் நடத்தியதற்கு இந்த விசாரணை அறிக்கையில் எந்த ஆதாரமும் அளிக்கப்படவில்லை.

அந்த அறிக்கையின் அடிப்படையில் சிரியா மீது எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது.அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள், சாட்சியங்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன, அவை நம்பும்படியாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய நபர்களை தண்டித்தே ஆக வேண்டும் என பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தூதர்கள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை ஐஸ் தீவிரவாதிகளும் விஷ வாயுவைப் பயன்படுத்தி வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Related posts: