ஒக்டோபரில் உயர்தர பரீட்சையை நடத்துவது தொடர்பில் கலந்துரையாடல் -கல்வியமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Friday, July 9th, 2021

ஒக்டோபரில் நடைபெறவிருக்கும் க.பொ.த உயர்தர பரீட்சையை ஒத்திவைத்தல் அல்லது நடத்துதல் தொடர்பில் கலந்துரையாடல்களின் பின் முடிவெடுக்கப்படும் என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு அமர்ந்த மாணவர்களின் செய்முறைப் பரீட்சைகள் விரைவில் நடத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை “2020 க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களின் பெறுபேறுகளை வழங்க முடியவில்லை. ஏனெனில் கீழைத்தேய, மேலைத்தேய இசை மற்றும் நாடகமும் அரங்கியலும் போன்ற பாடங்களுக்கான செய்முறைச் பரீட்சைகள் இன்னும் நடத்தப்படவில்லை” என புத்திக பத்திரண எம்.பி கேள்வி எழுப்பியிருந்தார்.

“நாம் விரைவில் செய்முறை பரீட்சைகளை நடத்த முயற்சிப்போம்” என அமைச்சர் பீரிஸ் பதிலளித்த கல்வி அமைச்சர் நடைபெற்று முடிந்த கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் வெளியிடப்படாமையாலும், அழகியல் செயன்முறை பரீட்சை நடத்தப்படாமையாலும் மாணவர்கள் முகங்கொடுத்துள்ள நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Related posts: