ஆண்டுதோறும் 750 பேர் மூளைச்சாவு – வைத்தியர் ரத்னசிறி!

Wednesday, October 4th, 2017

இலங்கையில் ஆண்டுதோறும் 750 பேர் மூளைச்சாவை எதிர்நோக்குவதாக தேசிய சிறுநீரக பரிமாற்று நிறுவனத்தின் தலைவரான வைத்தியர் ரத்னசிறி ஹேவகேவினை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சென்ற ஆண்டைவிட இவ் ஆண்டில் சிறுநீரக தானம் 75 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.கடந்த 2016 ஆம் ஆண்டில் 96 சிறுநீரகங்கள் தானமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டில் 19 சிறுநீரகங்கள் தானமாகபெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. சிறுநீரக தானம் தொடர்பில் முன்னரைவிட மக்கள் தற்போது விழிப்புணர்வு பெற்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஆண்டுதோறும் மூளைச்சாவை எதிர்நோக்கும் 750 பேரிடம் நல்ல நிலையிலுள்ள மாற்றக்கூடிய ஆயிரத்து 500சிறுநீரகங்கள் உள்ளதாக தேசிய சிறுநீரக பரிமாற்று நிறுவனத்தின் தலைவரான வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். மரணத்தின் பின்னர்சிறுநீரகங்களை தானம் செய்ய விரும்புவோர் என்ற இணையத்தளத்தில் பிரவேசித்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.அல்லது 011 242 2335 ஃ 36 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: