மெஸ்ஸியின் மனதை வென்ற சிறுவன் : ஆடவிட்டு அழகுபார்த்தார் மெஸ்ஸி!

பொலித்தீன் கவரில் மெஸ்ஸி என எழுதி அதை டீ–ஷேர்ட்டாக அணிந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிறுவன் முர்தாஸா அஹமதியை பிரபல கால்பந்தாட்ட வீரர் லயனல் மெஸ்ஸி நேற்று சந்தித்தார்.
ஆப்கானிஸ்தானின் 6 வயது சிறுவன் முர்தாஸா அஹமதி, ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் தீவிர ரசிகன் .
பொலித்தீன் கவரில் மெஸ்ஸி என எழுதி அதை டீ–ஷேர்ட்டாக அணிந்து அஹமதி விளையாடியது உலகளவில் வைரலானது. இதை அறிந்த மெஸ்ஸியும் தான் கையெழுத்திட்ட டி–ஷேர்ட்டை, அஹமதிக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், பார்சிலோனா அணிக்காக கத்தாருக்கு விளையாட சென்ற போது, முர்தாஸாவை நேரில் சந்தித்தார் மெஸ்ஸி. குறித்த சிறுவனின் கையை பிடித்தபடி மெஸ்ஸி கால்பந்து அரங்கத்துக்குள் நுழைந்தபோது ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை பிளந்தது.
Related posts:
ஒருநாள் போட்டிக்கான நுழைவுச்சீட்டு அனைத்தும் தீர்ந்தது!
உலகக் கிண்ண கால்ப்பந்து: முயன்றால் முடியாதது இல்லை – ரொனால்டோ!
வடக்கின் போரில் மகுடமத் சூடியது யாழ் மத்திய கல்லூரி!
|
|