கிண்ணம் வென்றது சென்.ஹென்றிஸ்

Saturday, November 11th, 2017

மைலோ கிண்ணத்துக்காக நடத்தப்பட்ட கால்பந்தாட்டத் தொடரில் 16 வயதுப் பிரிவு அணிகளுக்கு இடையிலான இறுதியாட்டத்தில் இளவாலை சென்.ஹென்றிஸ் கல்லூரி அணி கிண்ணம் வென்றது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை இடம்பெற்ற இறுதியாட்டத்தில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து இளவாலை சென்.ஹென்றிஸ் கல்லூரி அணி மோதியது. கோல்கள் இல்லாமல் முடிவுக்கு வந்தது முதல் பாதி.

இரண்டாம் பாதியில் பற்றிக்ஸின் முதல் கோலை பதிவு செய்தார் டிலக்சன். ஆட்டம் முடிவதற்கு 5 நிமிடங்கள் இருந்த நிலையில் கென்றிஸின் கோலை பதிவு செய்தார் பிரசாந். கடைசி கட்டத்தில் இரண்டு அணி வீரர்களினதும் ஆட்டத்தில் அனல் பறந்தது. நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களின் நிறைவில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோலைப் பதிவு செய்தமையால் சம நிலைத் தவிர்ப்பு உதைகளில் வெற்றியைத் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 7:6 என்ற கோல் கணக்கில் இளவாலை சென்.ஹென்றிஸ் கல்லூரி அணி வெற்றி பெற்றது.

முன்னதாக இடம்பெற்ற மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் கொற்றாவத்தை அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை அணியை எதிர்த்து நாவாந்துறை றோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலை அணி மோதிய ஆட்டத்தில் கொற்றாவத்தை அமெரிக்கமிசன் தமிழ்க்கலவன் பாடசாலை அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

Related posts: