சப்ராஸ் அகமதுவிற்கு நான்கு போட்டிகளில் விளையாட தடை விதித்தது ஐ.சி.சி!

Monday, January 28th, 2019

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்ஆபிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

டர்பனில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்  பாகிஸ்தான் அணி சொற்ப ஓட்டங்களுக்குள் சுருண்டது.

தென்ஆபிரிக்காவிற்கு எதிரான துடுப்பாட்டத்தின் போது, நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய பெலுக்வாயோ சிறப்பாக துடுப்பெடுத்தாடினார். அப்போது பாகிஸ்தான் அணியின் தலைவரும், விக்கெட் காப்பாளருமான சப்ராஸ் அகமது இனவெறி குறித்து பெலுக்வாயோவை ஸ்லெட்ஜிங் செய்தார்.

உருது மொழியில் பேசிய சப்ராஸ் அகமதின் குரல்பதிவு, ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. இதற்கு அர்த்தம் தெரிந்த பின்னர் கடும் விமர்சனம் எழும்பியது. சப்ராஸ் அகமது 3 ஆவது போட்டி தொடங்குவதற்கு முன் பெலுக்வாயோவிடம் நேரடியாக மன்னிப்புக் கேட்டார்.

இருந்தாலும் ஐசிசி இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் அவருக்கு நான்கு போட்டிகளில் விளையாட ஐசிசி தடைவிதித்துள்ளது. இதனால் தென்ஆபிரிக்காவிற்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் மற்றும் முதல் இரண்டு டி20 போட்டிகளில் சப்ராஸ் அகமது விளையாடமாட்டார்.

Related posts: