பெங்களூரை செய்தது  மும்பை இந்தியன்ஸ்!

Wednesday, April 18th, 2018

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணியை 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

ஐ.பி.எல். தொடரின் 14-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதி வருகின்றன. இதில் நணய சுழற்சியில் வென்ற பெங்களூர் அணி பந்துவீச முடிவு செய்தது.

சூர்ய குமார் யாதவ், எவின் லீவிஸ் மும்பை அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கினர். டெல்லி அணிக்கு எதிரான கடந்த போட்டியில் இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால், அவர்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பெங்களூர் அணி வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் முதல் பந்திலேயே சூர்ய குமார் யாதவை வெளியேற்றினார்.

அடுத்த பந்தில் இஷான் கிஷான் விக்கெட்டையும் எடுத்து மும்பை அணிக்கு பெரும் அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த அணித்தலைவர் ரோகித் ஷர்மா, லீவிசுடன் கைகோர்த்தார். முதல் இரண்டு விக்கெட்டுகள் அடுத்தடுத்து இழந்த போதிலும் லீவிஸ் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவர் 42 பந்துகளில் 65 ஓட்டங்கள் (பவுண்டரி 6, சிக்ஸ் 5) விளாசினார். இவர்களது பார்ட்னர்ஷிப்பை உடைக்க அணித்தலைவர் விராட் கோஹ்லி கோரி ஆண்டர்சனை பந்துவீச அழைத்தார். அப்போது, லீவிஸ் பந்தை சிக்சருக்கு தூக்கி அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 108 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய குருனல் பாண்டியா 15 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். ஐ.பி.எல். போட்டி தொடங்கியதில் இருந்து பார்ம் இன்றி தவித்துவந்த அணித்தலைவர் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடினார். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 213 ஓட்டங்கள் குவித்தது.

ரோகித் சர்மா 52 பந்தில் 94 ஓட்டங்கள் குவித்து சதத்தை தவறவிட்டார். பெங்களூர் அணி தரப்பில் ஆண்டர்சன் மற்றும் உமேஷ் யாதவ் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையடுத்து 214 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது.பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அணித்தலைவர் விராட் கோஹ்லியும், கிவிண்டன் டீ காக்கும் களமிறங்கினர்.

இருவரும் அதிரடியான தொடக்கம் கொடுத்தனர். டி காக் 12 பந்தில் 19 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டி வில்லியர்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்தவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விராட் கோஹ்லி மட்டும் நிலைத்துநின்று விளையாடி அரைசதம் கடந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோஹ்லி 92 ஓட்டங்கள் எடுத்தார்.பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்கள் எடுத்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை அணி பந்துவீச்சில் குருனல் பாண்டியா 3 விக்கெட்களும், பும்ரா, மெக்லினகன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து நாளை நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன

Related posts: