பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக  சம்பக ராமநாயக்க!

Tuesday, August 1st, 2017

பங்களாதேஸ் கிரிக்கட் அணியின் வேக பந்து பயிற்சியாளர் பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர் சம்பக ராமநாயக்கவை நியமிக்க அந்நாட்டு கிரிக்கட் நிர்வாகம் அவதானம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஏற்கனவே சம்பக ராமநாயக்கவிடம் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பங்களாதேஸ் கிரிக்கட் நிர்வாக சபையின் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.சிம்பாப்வே அணியுடன் இடம்பெற்ற போட்டிகளுக்கு பிறகு சம்பக ராமநாயக்க, இலங்கை அணியின் வேக பந்து பயிற்சியாளர் பதவியில் விலகிய நிலையில், சமிந்தவாஸ் அதற்காக நியமிக்கப்பட்டார்.இதேவேளை பங்களாதேஸ் அணியின் பிரதான பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்திக் ஹதுருசிங்க செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: