600 டெஸ்ட் விக்கட்டுகளே எனது இலக்கு !

Wednesday, November 29th, 2017

இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் குறைந்த போட்டிகளில் 300 டெஸ்ட் விக்கட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை ஏற்படுத்தி இருந்தார்.

இந்த விக்கட் எண்ணிக்கையை 600ஆக அதிகரிப்பதே தமது இலக்கு என்று அஷ்வின் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவின் டெனிஸ் லில்லி, 56 போட்டிகளில் 300 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்த சாதனையை, அஷ்வின் முறியடித்துள்ளார்.

தற்போது 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தம்மால், மேலும் போட்டிகளில் விளையாட முடியும். எனவே 600 டெஸ்ட் விக்கட்டுகளை வீழ்த்த முடியும் என்று எதிர்பார்ப்பதாக அஷ்வின் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: