பாகிஸ்தான் போட்டி குறித்து கூறிய டோனி!

Tuesday, August 29th, 2017

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான மகேந்திர சிங் டோனி பாகிஸ்தானுக்கு எதிரான பொட்டி என்றால் ஒரு காலில் கூட ஆடுவேன் என்று கூறியதாக தற்போதைய தேர்வு குழு தலைவரான பிரசாத் கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்த டோனி, தற்போது இலங்கை அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இத்தொடருக்கு முன்னர் இந்திய அணியின் தேர்வு குழு தலைவர், டோனிக்கு வாய்புகள் அதுவாக தேடி வராது. இதுவே கடைசி ,இனிமேல் வரும் தொடர்களில் அவர் அவருடைய இடத்திற்க்காக போராட வேண்டி இருக்கும் என்று கூறியிருந்தார்.இந்நிலையில் அவர் தற்போது, கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசியக் கிண்ணப் போட்டியின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது, இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜிம்மில் வலுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்ட போது டோனி திடீர் முதுகுத் தசைப் பிடிப்பினால் அவதியுற்றார்.வலுதூக்கும் கருவியுடன் கீழேயே விழுந்து விட்டார்.

உடனே மருத்துவ உதவி வரவழைக்கப்பட்டது. அவர் ஸ்ட்ரெச்சரில் அனுப்பி வைக்கப்பட்டார்.பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி மிகவும் முக்கியமானது. அது வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான களமாகவும் இருந்தது.உடனே நான் டோனியின் அறைக்குச் சென்று என்ன ஆனது என்று பார்க்கச் சென்றேன். அப்போது அவர் என்னிடம், கவலை வேண்டாம் எம்.எஸ்.கே பாய் என்றார். மாற்று வீரர் வரவழைக்கலாமா என்றேன், அதற்கும் டோனி, டோன்ட் ஒரி என்றார், ஆனால் எனக்கு திருப்தியளிக்கவில்லை.நான் தலைமைத் தேர்வாளர் சந்தீப் பாட்டிலிடம் தெரிவிக்க அவர் பார்த்திவ் படேலை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். அன்று மாலையே பார்த்திவ் படேல் அணியுடன் இணைந்தார்.ஆசியக் கிண்ண விதிமுறைகளின் படி நாம் 24 மணி நேரம் முன்னதாக அணி வீரர்களை அறிவிக்க வேண்டும். நான் டோனியின் நிலை என்னவென்று மீண்டும் பார்க்கச் சென்றேன். அப்போதும் தான் விளையாடுவதாகவும், பாகிஸ்தானுக்கு எதிராகவென்றால் ஒரு காலுடன் கூட ஆடுவேன் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

Related posts: