நியூசிலாந்தில் டி20 உலகக் கிண்ணம் நடத்தலாம் – ஆஸி. முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் ஆலோசனை!

Thursday, June 4th, 2020

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தியுள்ளதால் அவுஸ்திரேலியாவுக்குப் பதிலாக டி20 உலகக் கிண்ணத்தை நியூசிலாந்தில் நடத்தலாம் என ஆஸி. முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் யோசனை கூறியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண போட்டி திட்டமிட்டபடி அதே திகதிகளில் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய நிலவரத்தின்படி, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தான் சர்வதேச கிரிக்கெட் மீண்டும் திரும்பும் நிலையில் உள்ளது.

அவுஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை திட்டமிடப்பட்டுள்ள டி20 உலகக் கிண்ணம் நடைபெறுமா என்கிற கேள்விக்கு விடை தேடுவதற்காக ஐசிசி கூட்டம் இணையம் வழியாக நடைபெற்றது. ஆனால் இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஜூன் 10 அன்று மீண்டும் நடைபெறவுள்ள ஐசிசி கூட்டத்தில் டி20 உலகக் கிண்ணம் குறித்து முடிவெடுக்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்த வருடம் டி20 உலகக் கிண்ணம் நடைபெறாவிட்டால் இந்த வருடப் போட்டியை 2022-ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்த வருடம் இந்தியாவில் டி20 உலகக் கிண்ணம் நடைபெறவுள்ளது.

இந்த வருடம் டி20 உலகக் கிண்ணத்தை நடத்துவது என்பது அபாயகரமானது என கிரிக்கெட் அவுஸ்திரேலியா அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் கூறியுள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸை நன்குக் கட்டுப்படுத்தியுள்ளதால் அவுஸ்திரேலியாவுக்குப் பதிலாக டி20 உலகக் கிண்ணத்தை நியூசிலாந்தில் நடத்தலாம் என ஆஸி. முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் யோசனை கூறியுள்ளார்.

நியூசிலாந்தில் கடந்த 12 நாள்களாக கொரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை. இதை அடுத்து டி20 உலகக் கிண்ணம் குறித்து ஆஸி. முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் கூறியதாவது:

அடுத்த வாரம் எச்சரிக்கை வழிமுறை 1 க்கு மாறலாம் என நியூசிலாந்து பிரதமர் ஜசிண்டா ஆர்டெர்ன் கூறியுள்ளார். இதன்மூலம் சமூக இடைவெளி, மக்கள் கூட்டத்துக்கான தடை போன்றவை விலக்கிக் கொள்ளப்படும். எனவே டி20 உலகக் கிண்ணத்தை நியூசிலாந்தில் விளையாடலாமா? இது ஒரு யோசனை தான் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: