அவமானத்தால் கழற்றிவிடப்பட்ட முன்னணி வீரர்கள்!

Monday, November 21st, 2016

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட படுதோல்வியால் அவுஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்டில் 177 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், 2வது டெஸ்டில் இன்னிங்சிஸ் மற்றும் 80 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அடிலெய்டில் எதிர்வரும் 24ம் திகதி நடக்கிறது. இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மோசமான தோல்வி காரணமாக ஜோபர்னஸ், ஆடம் வோக்ஸ், பெர்குசன், பீட்டர் நெவில், ஜோ மென்னி ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

மேட்ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ் காம்ப், நிக் மேடின்சன் ஆகிய 3 துடுப்பாட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது.அதேபோல் வேகப்பந்து வீரர்கள் சாயெர்ஸ், ஜேக்சன் பேர்ட், விக்கெட் கீப்பர் மேக்யூ வாடே ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளது.32 ஆண்டுகளுக்கு பிறகு அவுஸ்திரேலிய அணியில் 6 வீரர்கள் மாற்றம் செய்யப்படுவது இதுவே முதன் முறையாகும்.

கடைசி டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய வீரர்கள் விபரம்

ஸ்டீவன் ஸ்மித் (அணித்தலைவர்), டேவிட் வார்னர், மேட் ரென்ஷா, உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ், கோம்ப், நிக்மேடின்சன், மேக்யூ வாடே, ஸ்டார்க், ஹாசல்வுட், நாதன் லயன், ஜேக்சன் பேர்டு, சாயெர்ஸ்.

625.167.560.350.160.300.053.800.300.160.90

Related posts: