மீண்டும் வருகிறது இலங்கை பிரீமியர் லீக்!

Thursday, September 7th, 2017

இலங்கை பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் நடத்துவது குறித்து இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது

இலங்கை பிரீமியர் லீக் (SLPL) டி20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2012-ல் முதல் முறையாக நடைபெற்றது. இதில் 7 அணிகள் கலந்து கொண்ட நிலையில், பல்வேறு வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொண்டு விளையாடினார்கள்.

2012-க்கு பிறகு அடுத்தடுத்த சில வருடங்களில் மீண்டும் இலங்கை பிரீமியர் லீக் போட்டிகளை நடத்த முயன்ற நிலையில் பல்வேறு காரணங்களால் அது ரத்து செய்யப்பட்டது

இந்நிலையில், தற்போது மீண்டும் இந்த போட்டிகளை நடத்துவது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறதுஇலங்கை அணி சமீபகாலமாக மோசமாக விளையாடி வருவதால் அவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தவே இந்த தொடர் நடத்தப்படவுள்ளது

ஐபிஎல் போட்டிகள் மூலம் இந்திய அணிக்கு பல திறமையான வீரர்கள் கிடைத்தது போல இலங்கை பிரீமியர் லீக் போட்டிகள் மூலம் இலங்கை அணிக்கு சிறந்த வீரர்கள் கிடைப்பார்கள் என நம்பப்படுகிறது.இந்நிலையில், அடுத்து நடத்தவிருக்கும் இலங்கை பிரீமியர் லீக்கில் விராட் கோஹ்லி உள்ளிட்ட இந்திய வீரர்களை விளையாட வைக்கும் முயற்சியையும் இலங்கை நிர்வாகம் மேற்கொள்ள இருக்கிறது.

Related posts: