ஊக்கமருந்துப் பாவனை: 9 பேரின் பதக்கங்கள் பறிப்பு!

Friday, October 28th, 2016

2008இலும் 2012இலும் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஊக்கமருந்துப் பாவனையில் ஈடுபட்டமைக்காக, அப்போட்டிகளில் பதக்கம் வென்ற ஒன்பது பேர் உள்ளிட்ட 12 பேர், சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவிடம் சிக்கியுள்ளனர்.

ஊக்கமருந்துச் சோதனைக்காக அவர்கள் வழங்கிய மாதிரிகள், நவீன தொழில்நுட்பத்தின் கீழ் சோதனை செய்யப்பட்ட நிலையிலேயே, இவர்கள் சிக்கியுள்ளனர்.

கஸக்ஸ்தானைச் சேர்ந்த பளுதூக்கல் வீரர்கள் மூவரது 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் பெறப்பட்ட  தங்கப் பதக்கங்கள் பறிக்கப்பட்டுள்ளன. ஸுல்பியா சின்ஷான்லோ, மையா மனேஸா, ஸ்வெற்லானா பொடோபெடோவா ஆகியோரோ, இவ்வாறு தங்கம் வென்றவர்களில், தங்களது தங்கப் பதக்கங்களைப் பறிகொடுத்தவர்களாவர்.

2008ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற உஸ்பெக்கிஸ்தானின் சொஸ்லன் டிஜிவ்; பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற உஸ்பெக்கிஸ்தானின் ஒல்ஹா கொரோப்கா; பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற பெலாரஸின் அன்ட்ரேய் றிபாக்கோ; மல்யுத்தத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற கஸக்ஸ்தானின் மைமுராஸ் டிஜியேவ்; பளுதூக்கலில் வெண்கலப் பதக்கம் வென்ற பெலாரஸின் நட்டஸியா நொவிகாவா; 3,000 தடை ஓட்டத்தில் வெண்கலம் வென்ற பெலாரஸின் எகடெரினா வோல்கோவா ஆகியோரும் தங்களது பதக்கங்களை இழந்துள்ளனர்.

இவர்கள் தவிர, ஸ்பெய்னின் தடைதாண்டல் வீரர் ஜோசெப்பின் என்கிருக்கா ஒனியா, கியூபாவின் நீளம்பாய்தல் விரர் வில்பிரெடோ மார்ட்டினெஸ், அஸெரியின் பளுதூக்கல் வீரர் சர்டார் ஹஸனோவ் ஆகியோர், ஊக்கமருந்துச் சோதனையில் சிக்கிய ஏனையோராவர்.

wPiMxu36929561059_Z14

Related posts: