இறுதிப் போட்டியில் சென்.அன்ரனீஸ் அணி சம்பியன்!

Wednesday, February 28th, 2018

முல்லைத்தீவு 68 வது படைத்தரப்பின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 உதைப்பந்தாட்ட கழகங்களுக்கு இடையில் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டியில் மூன்று அணிகள் தெரிவாகியுள்ளன.

சென். அன்ரனிஸ் இரணைப்பாலை அணி முதலாம் இடத்தையும் அலையோசை உடுப்புக்குளம் அணி இரண்டாம் இடத்தினையும் சுபர் ரூன் ஸ்ரேல் கழகம் மூன்றாம் இடத்தினையும் பெற்று வெற்றிக் கிண்ணங்களை தமதாக்கி கொண்டுள்ளது.

வெற்றிபெற்ற அணிகளும் சிறந்த வீரர்களான சென். அன்ரனிஸ் விளையாட்டு கழகத்தின் ஜெ.தயாளன், எ.அதுஜன், ஜெ.ஜீவிதன் மற்றும் அலையோசை விளையாட்டுக் கழகத்தின் என்.காந்தரூபன், எம்.மதுராகரன் ஆகியோருக்கு பதக்கங்களையும் கேடயங்களையும் முல்லைத்தீவு இராணுவ தலைமையகத்தின் பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் துஸ்யந்தராஜகுருவால் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்விற்கு 68 ஆவது படைப்பிரிவின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் ரஸிக பெர்னாந்தும் 64 ஆவது படைப்பிரிவின் படைத்தளபதி பிரிகேடியர் ஜயநாத் ஜயவீரவும் 683 வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் துமிந்த ஜயசிங்கவும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.பிரதீபன், கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரும் கலந்து சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: