கிரிக்கட் வீரரின் பரிதாப நிலை: சோகத்தில் ரசிகர்கள்!

Thursday, August 31st, 2017

சூதாட்டப் புகாரில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் ஆரம்ப துடிப்பாட்ட வீரர் சர்ஜீல் கானுக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் கிரிக்கட் தொடர் போன்று பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக்  கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் துபாயில் நடைபெற்ற இதன் 2வது சீசனில் இஸ்லாமாபாத் யுனைட்டட்  அணியில் பங்கேற்று விளையாடிய சர்ஜீல் கான் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது.

‘பெஷாவர் ஸல்மி’ அணிக்கு எதிரான போட்டியில் 4 பந்துகளில் ஒரு ஒட்டம் மட்டுமே எடுத்து 2 பந்துகளில் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமலும், ஆட்டமிழந்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக கடந்த பெப்ரவரி 10ஆம் திகதி சர்ஜீல் கானை பாகிஸ்தான் அணியில் இருந்து தற்காலிகமாக நீக்கியது பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம்.அவர் மீதான புகார் குறித்து ஊழல் தடுப்பு பிரிவில் விசாரணை நடந்து வந்த நிலையில் 28வயதான சர்ஜீல் கான் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில், சர்ஜீல் கானுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. அவர் தற்காலிகமாக நீக்கப்பட்ட தினத்தில் இருந்து இத்தடை அமலுக்கு வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது

Related posts: