இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 498 ஓட்டங்கள்

Sunday, May 29th, 2016
இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 9 விக்கட்டுக்களை இழந்துள்ள 498 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி சார்பாக முஈன் அலி 155 ஓட்டங்களையும் ஹெல்ஸ் 83 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் நுவன் பிரதீப் 4 விக்கட்டுக்களையும், சிறிவர்தன 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தியுள்ளனர்.

முன்னதாக நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் விக்கட்டுக்களை வீழ்த்திய இலங்கை பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் 300 விக்கட்டுக்களை கைப்பற்றிய மூன்றாவது நபராக இடம்பிடித்துள்ளார்.

Related posts: