சுசந்திகாவுக்கு பதக்கத்தை ஏலத்தில் விட எந்தவொரு தேவையும் கிடையாது- தயாசிறி!

Monday, June 5th, 2017

இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகாவுக்கு தனது பதக்கத்தை ஏலத்தில் விடுவதற்கு எந்தவொரு தேவையும் கிடையாது எனவும், அவருடைய குறித்த இந்த தீர்மானத்தில் வேறு உள்நோக்கம் இருப்பதாகவும் விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுசந்திகாவின் குற்றச்சாட்டு தொடர்பாக வினவிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தொடர்ந்து அமைச்சர் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்;

“..சுசந்திகா ஜெயசிங்கவிற்கு தனது வெள்ளி பதக்கத்தை விற்பனை செய்யும் அவசியம் ஏற்பட மாட்டாது. சுசந்திகா ஜெயசிங்கவிற்கு 75,000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு ஒன்று விளையாட்டு அமைச்சகத்தின் ஆலோசகர் பதவியொன்றை வழங்க தான் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்த போதிலும், அமைச்சரவை அவருக்கு 60,000 ரூபாய் மாத்திரம் வழங்க தீர்மானித்தது..” “..எனினும், அதனை பெற்றுக் கொள்ள சுசந்திகா ஜயசிங்க முன்வரவில்லை. அவருக்கு அந்த பதவியில் கடமையாற்ற எந்த தடையும் இல்லை..” என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தான் வென்ற ஒலிம்பிக் வெள்ளி பதக்கத்தை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கையின் ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: