ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றும் வீர, வீராங்கனைகளுக்கு இராணுவத் தளபதி வாழ்த்து!

Monday, July 12th, 2021

எதிர்வரும் ஜூலை 23 தொடக்கம் ஓகஸ்ட் 8 வரையில் ஜப்பானின் டோக்கியோ நகரத்தில் இடம்பெறவுள்ள 32 வது ஒலிம்பிக் போட்டிகள் ௲ 2020 இல் பங்கேற்கவுள்ள முதலாவது இலங்கை இராணுவத்தின் நடுவர் மற்றும் இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றவுள்ள வீர, வீராங்கனைகள் (09) இலங்கை இராணுவ தலைமையகத்தில் தேசிய விளையாட்டு தெரிவுக்குழு தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட ஒலிம்பிக் குழுவின் தலைவர் சுரேஷ் சுப்பிரமணியம், துப்பாக்கிச் சுடுதல் அணியின் தலைவர் பிரதீப் எதிரிசிங்க, ஒலிம்பிக் போட்டிகளை பிரதிநிதிதுவப்படுத்தும் டெஹானி எகொடவெல (ரைபில் போட்டிகள்), மற்றும் நிலூக கருணாரத்ன ( ஒற்றையர் பெட்மிண்டன் போட்டிகள்) ஆகியோர் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவுடன் எண்ணங்களை பகிர்ந்துகொண்டனர்.

இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணியின் லெப்டினன் கேணல், டீ.எம்.டி.சி. திசாநாயக்க, 32 வது ஒலிம்பிக் போட்டிகள் ௲ 2020 யின் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளின் நடுவராக பங்கெடுக்கவிருப்பதுடன், இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்கும் முதலாவது முதலாவது அதிகாரியும் அவராவார். இவர் இலங்கை இராணுவத்தின் சிறந்த துப்பாக்கி சூட்டாளரகளில் ஒருவர் . ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கிச் சுடும் போட்டிகளின் நடுவர்களுன் ஒருவராக லெப்டினன் கேணல், டீ.எம்.டி.சி. தசநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளமை இலங்கை இராணுவத்துக்கும் இலங்கைக்கும் கௌரவமாகும். தனது தொழில்முறை வாழ்வில் பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ள லெப்டினன் கேணல், டீ.எம்.டி.சி. தசநாயக்க அதனுடன் தொடர்புடைய பல்வேறு பயிற்சிகளையும் பெற்றுள்ளார். 2003 ஆம் ஆண்டில் இருந்து தேசிய துப்பாக்கிச் சுடும் கழகத்தில் பல பதவிகளையும் வகித்துள்ளார்.

இதன்போது இலங்கையை பிரதிநிதிதுவப்படுத்தி பங்கேற்கும் வீர, வீராங்கனைகளுக்கு வாழ்த்து கூறிய ஜெனரல் ஷவேந்திர சில்வா, சந்திப்பில் கலந்துகொண்ட வீர வீராங்கனைகளுக்கு தளபதியினால் பாராட்டுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பணப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், தற்போதும் இத்தாலியில் பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கும் புகழ்பெற்ற ஓட்ட வீரரான லான்ஸ் கோப்ரல் சுபுன் அபேகோன் இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்கவுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட தேசிய விளையாட்டு தெரிவுக் குழுவின் தலைவர் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஒலிம்பிக் வரலாற்றில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுத்து இலங்கைக்கு பதக்கங்களை வென்று கொடுத்த விதம் தொடர்பில் நினைவுகூர்ந்ததோடு அவர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.

அதேநேரம் இந்நாட்டின் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் காண்பிக்கும் அர்ப்பணிப்புக்காக ஜெனரல் ஷக்ஷேந்திர சில்வாவுக்கு அதிகாரிகளும் வீர வீராங்கனைகளும் பாராட்டுக்களை தெரிவித்தனர். இம்முறை இலங்கையை பிரதிநிதிதுவப்படுத்தி 9 வீர வீராங்கனைகள் பங்கெடுக்க உள்ளதோடு, மெடில்டா கால்ஸன் (குதிரை ஓட்டும் போட்டி), மில்கா கிஹானி டி சில்வா (ஜிம்னாஸ்டிக் போட்டிகள்), தெஹானி எகொடவெல (மகளிர் துப்பாக்கிச் சுடும் போட்டிகள்), மெதிவ் அபேசிங்க (நீச்சல் போட்டிகள்), நிலூக கருணாரத்ன (பெட்டிண்டன் போட்டிகள்), ஷாமர தர்மவர்தன (மல்யுத்த போட்டிகள்), நிமாலி லியனராச்சி (800 மீற்றர் மகளிர் ஓட்டப் போட்டிகள்) மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த சுபுன் அபேகோன் (100 மீற்றர் ஓட்டப் போட்டிகள்) ஆகியோர் பங்கெடுக்கவுள்ளனர்

Related posts: