சீனா போன்ற பெரிய கடன் வழங்கும் நாடுகள் இலங்கை போன்ற நாடுகளுக்கு கடன் நிவாரணத்தை வழங்குவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கோரிக்கை!

Saturday, September 10th, 2022

சீனா போன்ற பெரிய கடன் வழங்கும் நாடுகள் இலங்கை போன்ற நாடுகளுக்கு கடன் நிவாரணத்தை வழங்குவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் (IMF) தலைவர் கிறிஸ்டினா ஜோர்ஜிவா வலியுறுத்தியுள்ளார்.

தனது இந்திய விஜயத்தின் போது ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்த அவர், வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களில் சுமார் 25% பேராபத்தில் இருப்பதாகவும், இலங்கை நீண்ட காலமாகவே இப்படிப்பட்ட நிலையிலேயே இருப்பதாகவும் கூறியுள்ளார்.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 60% க்கும் அதிகமான நாடுகள் இதன் காரணமாக ஆபத்தை எதிர்நோக்குகின்றன. வலுவான அடிப்படைகளைக் கொண்ட நடுத்தர வருமான நாடுகள் கூட மோசமான சூழ்நிலையில் விழுந்துள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வலுவான அடிப்படைகளைக் கொண்ட நாடுகள் கூட பாதிக்கப்படக்கூடியவை என்று அவர் கூறினார். எனவே, இதில் இருந்து கற்க வேண்டிய பாடங்களாக, விவேகமான நிதிக் கொள்கைகள் மற்றும் அதிர்ச்சிகளைத் தாங்கும் திறனை உருவாக்குதல் ஆகியவை அமைந்துள்ளன என்றும் ஜோர்ஜீவா கூறியுள்ளார்.

இந்தநிலையில் சீனா போன்ற பாரிய கடன் வழங்கும் நாடுகள், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு, இந்த அதிர்ச்சிகளின் சூழலில், தலைமைத்துவத்தைக் காட்டவேண்டும்.

மேலும் இந்த நாடுகளுக்கு கடன் நிவாரணம் வழங்க விரைவாக முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் கிறிஸ்டினா ஜோர்ஜிவா வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: