நல்லூர் முருகன் ஆலயத்தில் நேர்த்திக் கடன் செய்ய விரும்பும் அடியவர்களுக்கு வேண்டுகோள் !

Saturday, August 19th, 2017

யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவை முன்னிட்டுத் தேர், தீர்த்த உற்சவ நாட்களில் தூக்குக்காவடி, பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்ற விரும்பும் அடியார்களுக்கு யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ. வாகீசன்  வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்

இவ்வருடம் நல்லூர் கோவில் வடக்கு வீதியூடாக (சங்கிலியன் வீதியூடாக கோவில் வீதி வடக்குப் பக்கமாக) துர்க்காமணி மண்டபத்தை அடைந்து வடக்கு வீதியில் குபேரக் கோபுர வாசலை அடைந்து அங்கு நேர்த்தியை முடிவுறுத்தவும். இதன் பின் தூக்குக்காவடி அல்லது பறவைக்காவடியுடன் வந்த வாகனம் நல்லூர் தெற்கு வீதியூடாக (கைலாச பிள்ளையார் கோவிலடிப்  பக்கம்) வெளியேறவும்.

அத்துடன் சுவாமி வெளிவீதியுலா வந்து இருப்பிடத்தை அடையும் வரையிலான நேரத்தைக் கருத்திற்கொண்டு தூக்குக்காவடி அல்லது பறவைக்காவடி எடுத்து நேர்த்தி செய்யும் அடியார்கள்  ஆலய வீதிக்குப் பிரவேசிக்குமாறும் யாழ். மாநகர ஆணையாளர் கேட்டுள்ளார்.

Related posts:


ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்...
பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள தவறினால் கடும் நடவடிக்கை - கோவிட் கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவர் ஜெ...
உக்ரைன் மீதான போர் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும் தேயிலை ஏலத்தில் இலங்கை தேயிலை அதிகரிப...