இலங்கையில் உருவாகிவரும் மற்றொரு பேராபத்து: வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை!

Thursday, May 14th, 2020

இலங்கையில் தற்போது நிலவும் தென்மேற்கு பருவமழையால் வெள்ளம், மண் சரிவு மற்றும் பலத்த காற்று ஆகிய அனர்த்த நிலைமை ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த அறிக்கையில் – “2020ஆம் ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை மே மாதம் மூன்றாம் வாரத்தில் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

கடந்த வருடங்களை போன்று இம்முறையும் தெற்மேற்கு பருவமழை பெய்தால் வெள்ளம், மண்சரிவினால் பாரிய ஆபத்துக்கள் ஏற்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் தென்மேற்கு பருவமழை பெய்தால் அதனை முகாமைத்துவம் செய்வதற்கு கடுமையான சிரமம் ஏற்படும் என்றும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்கு மத்தியில் மக்களை இணைந்து தெளிவுப்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுபடுத்த ஊடங்கள் பாரிய உதவியை மேற்கொண்டமையினால் மக்களுக்கு பருவ மழை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், எதிர்வரும் நாட்களில் ஏற்படும் அனர்த்தகளின் போது மக்கள் செயற்பட வேண்டிய முறை தொடர்பில் ஊடங்கள் மூலம் தெளிவுபடுத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts:


வங்காள விரிகுடாவில் வலுவடைகிறது தாழமுக்கம் - அடுத்த 12 மணித்தியாலங்களில் சூறாவளியாக வலுவடையக் கூடி...
மின்சார தேவை அதிகரிப்பு - நாடு முழுவதும் இன்றும் இரு மணிநேர மின்வெட்டு - பொதுப் பயன்பாட்டுத் திணைக...
கடன் நெருக்கடியில் இருந்து விடுபட இலங்கைக்கு ஆதரவளிக்கப்படும் - வெளிவிவகார அமைச்சரிடம் சர்வதேச அரச ...