விசமத்தனத்துடன் செயற்படுகின்றது வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் – கல்வித்துறை சார்ந்தோர் குற்றச்சாட்டு!

Saturday, August 22nd, 2020

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் அரச சுற்று நிருபங்களுக்கு முரணாக செயலமர்வுகளை முன்னெடுத்த வடக்கு மாகாண கல்வி திணைக்களம் செயற்பட்டு வருவதாக ஆசிரியர்கள்  விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது –

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 20 பேருக்கு மேல்  கலந்துகொள்ளும் வகையில் செயலமர்வுகளை ஏற்பாடு செய்ய  கூடாதென சுற்று நிருபம் கூறும் நிலையில் இன்று 22.08.2020 சனிக்கிழமை வடமாகாணத்தின் 12 கல்வி வலயங்களிலும் ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் 40 முதல் 50 பேருக்கும் அதிகமோனோர் ஒரே இடத்திற்கு அழைக்கப்பட்டு எந்தவிதமான சுகாதார ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படாது செயலமர்வு நடத்தப்பட்டுள்ளது.

இதே வேளை குறித்த செயலமர்வுகள் தொடர்ந்து ஒவவொரு சனிக்கிழமையும் நடத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுளமையால் மாவட்டத்திற்கு வெளியே பணியாற்றும் ஆசிரியர்கள்  கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்து சமயத்தவரது முக்கிய விதரமான ஆவணி சதுரத்தி தினமான இன்று அத்தகைய செயலமரிவினை வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் விசமத்தனமாக ஒழுங்கு செய்ததை ஆசிரியர்களும் அதிபர்களும் வலயக் கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்களும் மிகவும் அதிருப்தியுடன் கருத்துக்ளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கடும் சுகவீன முற்றுள்ள தோழர் இராசகிளியின் தந்தையாரை பார்வையிட டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதி நே...
வீணைக்கு அளிக்கின்ற வாக்கு ஒருபோதும் வீணாகாது என்பதை வரலாறு நிரூபித்துக் கொண்டிருக்கிறது - இந்து மத ...
திருமண வைபவங்களை தவறாக பயன்படுத்துகின்றனர் – வழிமுறைகள் பின்பற்றாவிடின் கட்டுப்படுத்தும் நிலை உருவாக...