ஒருநாள் தொடருக்கு தயாரான இலங்கை!

Wednesday, June 15th, 2016

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இலங்கை அணியின் சகலதுறை வீரர் மிலிந்த சிறிவர்த்தனே நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த சிறிவர்த்தனே சொல்லிக் கொள்ளும் அளவு சோபிக்கவில்லை.

இந்நிலையில் அவர் எதிர்வரும் ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியில் இடம்பெறவில்லை.

தவிர, திமுத் கருணாரத்னே, கெளஷால் சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, டில்ருவன் பெரேரா ஆகியோரும் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அணியின் மேலாளர் சரித் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு பதிலாக பர்விஸ் மஹ்ரூப், உபுல் தரங்க, சீக்குகே பிரசன்ன, சுராஜ் ரந்திவ், தனுஷ்க குணதிலக்க ஏற்கனவே ஒருநாள் அணிக்கு அறிவிக்கப்பட்டிருந்தனர்.

அயர்லாந்து அணிக்கு எதிராக 2 போட்டிகளை ஒருநாள் தொடர் எதிர்வரும் 16ம் திகதியும், இங்கிலாந்துக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடர் 21ம் திகதியும் ஆரம்பமாகிறது.

இலங்கை அணி விபரம்:-

மேத்யூஸ் (அணித்தலைவர்), தினேஷ் சந்திமால் (துணைத் தலைவர்), குஷால் பெரேரா, தனுஷ்க குணதிலக்க, உபுல் தரங்க, குஷால் மெண்டிஸ், லஹிரு திரிமன்னே, தனன்ஜெய டி சில்வா, சீக்குகே பிரசன்ன, சுராஜ் ரந்திவ், தசன் சனக, பர்விஸ் மஹ்ரூப், நுவன் பிரதீப், சுரங்க லக்மல், சமிந்த பன்டார, சமிந்த எரங்க.

Related posts: