பரிதாபமாக தோற்றது மேற்கிந்திய தீவு: இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது இலங்கை!

Thursday, November 24th, 2016

மேற்கிந்திய திவு அணிக்கு எதிரான போட்டியில் 1 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.

ஜிம்பாப்வேயில் மூன்று அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியதீவுகள் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதனையடுத்து இலங்கை அணியின் தனஞ்சய டி சில்வா, குசல் பெரேரா களமிறங்கினர். 7 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பெரேரா ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

தொடர்ந்து தனஞ்சய டி சில்வாவுடன் இணைந்த நிரோஷன் டிக்வெல்ல 106 பந்துகளுக்கு 94 ஓட்டங்களை பெற்றிருந்த போது எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்து வந்த குசால் மெண்டிசும் 73 பந்துகளில் 94 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை அணியின் ஓட்டங்கள் மளமளவென உயர்ந்தது, அடுத்து வந்த உபுல் தரங்கா மற்றும் சஜித் பத்திரன இரட்டை இலக்க ஓட்டங்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

முடிவில் இலங்கை அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து, 50 ஓவரில் 330 ஓட்டங்கள் எடுத்து மேற்கிந்திய தீவுகளுக்கு கடின இலக்கை நிர்ணயித்துள்ளது.கடின இலக்கை துரத்திய மேற்கிந்திய தீவு அணிக்கு துவக்க ஆட்டக்காரர் லிவிஸ் ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டத்தொடங்கினார். மற்றொரு ஆட்டக்காரரான சார்லஸ் 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் மேற்கிந்திய தீவு அணி ஒரு கட்டத்தில் 40 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 262 ஓட்டங்கள் எடுத்து தடுமாறிக்கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து இலங்கை அணி தான் வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், துவக்க ஆட்டக்காராக இருந்த லீவிஸ் ஒரு புறம் அதிரடி காட்ட, மேற்கிந்திய தீவு அணியின் தலைவர் ஹோல்டர் மறு புறம் அதிரடி காட்ட, மேற்கிந்திய தீவு அணியின் ஓட்டம் மளமளவென உயரத்தொடங்கியது.

தொடர்ந்து அதிரடி காட்டிய லிவிஸ் சதம் கடந்தார். ஒரு கட்டத்தில் மேற்கிந்திய தீவு வெற்றி பெற்று விடும் என்ற அளவிற்கு ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது. மேற்கிந்திய தீவு அணி 48.2 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 312 ஓட்டங்கள் எடுத்தது.இதனால் மேற்கிந்திய தீவு அணிக்கு கடைசி 10 பந்துக்கு 18 ஓட்டங்கள் தேவைப்பட்டது. மேற்கிந்திய வீரர் பென் ஒரு சிக்ஸர், பவுண்டரி என அடிக்க ஆட்டம் சூடுபிடித்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பென் அவுட்டாக மேற்கிந்திய தீவு அணி இறுதியில் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 329 ஓட்டங்கள் குவித்து 1 ஓட்டம் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இலங்கை அணியைச் சேர்ந்த குசால் மெண்டிஸ் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

625.0.560.320.500.400.194.800.668.160.90

Related posts: