சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவனின்  சாதனை!

Wednesday, April 25th, 2018

கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற்று வரும் தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் சாவகச்சேரி இந்து கல்லூரியை சேர்ந்த ஏ. பவித்ரன் கோலூன்றி பாய்தல் போட்டியில் 4.7 மீற்றர் உயரம் பாய்ந்து போட்டிசாதனையை நிலைநாட்டினார்.

இதேவேளை ராஜகிரிய கேற்வே சர்வதேச பாடசாலையை சேர்ந்த சலின்டா யென்சனா புதிய போட்டி சாதனையை நிலைநாட்டியுள்ளார். மகளிருக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் 32 வருடங்களுக்கு முன்னர்நிலைநாட்டப்பட்ட சாதனையை இவர் முறியடித்துள்ளார்.

இப்பாகமுவ மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த வீராங்கனை பி.பி.ஐ.என்.பல்லேகம 16 வயதுக்கு உட்பட்ட உயரம்பாய்தல் போட்டியில் சாதனை நிலைநாட்டியுள்ளார்.

16வயதுக்கு உட்பட்ட 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஜனாதிபதி பெண்கள் கல்லூரியை சேர்ந்த காவிந்தி சஞ்சனா எதிரிசிங்ஹ போட்டி சாதனை நிலைநாட்டியுள்ளார்.

இதனிடையே அக்குரம்பட வீரகெப்பெட்டிபொல கல்லூரியை சேர்ந்த அருண தர்ஷன 20 வயதுக்கு உட்பட்ட 200 மீற்றர் ஓட்டப் போட்டியிலும், கொழும்பு மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தை சேர்ந்த சச்சின் நிலக்சா பெரேரா23 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

லங்கா லயன்ஸ் விளையாட்டு கழகத்தை சேர்ந்த எம்.எஸ்.எம். சஃபான் 23 வயதிற்கு உட்பட்ட 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் சாதனை நிலைநாட்டினார். வுளல ஏ ரத்னாயக்க கல்லூரியை சேர்ந்த கே.எம்.கன்னங்கர 3ஆயிரம் மீற்றர் தடை தாண்டி ஓடும் போட்டியிலும், களுத்துறை மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தை சேர்ந்த பூர்ணிமா ஜயமாலி குணரத்ன 23 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான உயரம் பாய்தல் போட்டியிலும் போட்டிசாதனை நிலைநாட்டியுள்ளனர்.

Related posts: