உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளராக குமார சங்கக்கார!
Saturday, May 18th, 2019
நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான நேர்முக வர்ணனையாளர்கள் மற்றும் ஏனைய ஒளிபரப்புத் திட்டங்களை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) வெளியிட்டுள்ளது.
இதில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார சங்கக்கார முதல் முறையாக உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் வர்ணனை வழங்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
கடந்த முறை உலகக் கிண்ணத்தை சுவீகரித்த மைக்கல் கிளார்க் ஐ.சி.சி. தொலைக்காட்சி வர்ணனையாளராக இடம்பெறுவதோடு அவருடன் நசார் ஹுஸைன், இயன் பிசொப், சவ்ரௌ கங்குலி, மெலானி ஜோன்ஸ், குமார் சங்கக்கார, மைக்கல் ஆர்தடன், அலிசன் மிச்சல், பிரன்டன் மெக்கலம், கிராம் ஸ்மித் மற்றும் வசீம் அக்ரம் ஆகிய அதிகம் மதிப்புக்குரியவர்கள் இந்த குழுமத்தில் இடம்பெறுகின்றனர்.
இந்த தொடர் முழுவதும் நேர்முக வர்ணனை செய்யப்போகும் ஏனையவர்களில் ஷோன் பொலக், மைக்கல் சிலேட்டர், மார்க் நிகலஸ், மைக்கல் ஹோல்டிங், இசா குஹா, பொம்மி ம்பங்குவா, சஞ்ஜே மஞ்ரேக்கர், ஹார்ஷே போக்லே, சைமன் டோல், இயன் ஸ்மித், ரமிஸ் ராஜா, ஆத்தர் அலிக்கான் மற்றும் இயன் வார்ட் ஆகியோர் உள்ளடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


