மழையால் முடிவுக்கு வந்த போட்டி!

Wednesday, August 24th, 2016

தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், டேர்பனில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னரே குறித்த போட்டி முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 263 ஓட்டங்களைப் பெற்றது. ஹஷிம் அம்லா 53, டெம்பா பவுமா 46, குயின்டன் டி கொக் 33, கஜிஸ்கோ ரபடா ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ட்ரெண்ட் போல்ட், நீல் வக்னர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து 15 ஓட்டங்களைப் பெற்றவரையிலேயே குறித்த போட்டியின் ஆட்டம் இடம்பெற்றிருந்தது. வீழ்த்தப்பட்ட இரண்டு விக்கெட்டுகளையும் டேல் ஸ்டெயின் வீழ்த்தியிருந்தார்.

இரண்டாவது நாள் ஆட்டத்துக்குப் பின்னர் பெய்த 65 மில்லிமீற்றர் மழையினால், அண்மையிலேயே நிர்மாணிக்கப்பட்ட மைதானம் பாதிப்படைந்து ஈரமானதாகாவும் மென்மையானதாகவும் காணப்பட்டதால் மேற்கொண்டு போட்டியைத் தொடர முடியாமல் போனது.

Related posts: