கறுப்புத் துடுப்புக்கு மீண்டும் அனுமதி!

Friday, December 30th, 2016

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் கழகங்களுக்கு இடையிலான ரி-20 தொடரில் கறுப்பு நிறத் துடுப்பு மட்டையைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

மேற்கிந்தியத் தீவுகளின் சகலதுறை வீரரான ரசல் சிட்னி அணிக்காக ஒப்பந்தமாகி விளையாடி வருகிறார். சிட்னி அணியின் 1ஆவது ஆட்டத்தில் அவர் கறுப்பு நிறத் துடுப்பு மட்டையை ஆஸ்திரேலியா கிரிக்கெட் சபையின் அனுமதியின் அடிப்படையில் பயன்படுத்தினார். ஆனால் குறித்த துடுப்பு மட்டை பந்தின் இயல்பான தன்மையைப் பாதிக்கிறது என்று நடுவர்களால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த வகை துடுப்பு மட்டை தடைசெய்யப்பட்டது. தற்போது, பந்தைப் பாதுகாக்க உதவும் தெளிவான மேற்புற அட்டை சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து கறுப்புத் துடுப்புக்கு மீண்டும் அனுமதி கிடைத்தது.

12

Related posts: