டேவிட் வோணருக்கு மன நிம்மதியைக் கொடுத்த அதிர்ஷ்டம்!

Wednesday, September 7th, 2016

இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 5ஆவதும் இறுதியுமான போட்டி ஆரம்பிக்கும் போது, அத்தொடரை 2-3 என்ற கணக்கில் முடித்துக் கொள்ளும் நோக்கில், இலங்கை அணி களமிறங்கியது. ஆனால், அவுஸ்திரேலிய அணியின் பதில் தலைவர் டேவிட் வோணரின் அற்புதமான சதம், அந்த வாய்ப்பை இலங்கைக்கு வழங்கியிருக்கவில்லை.

பல்லேகெலயில் இடம்பெற்ற இப்போட்டியில் இலங்கை அணி முதல் இனிங்ஸில் பெற்ற 195 ஓட்டங்களுக்குப் பதிலளித்தாடி அவுஸ்திரேலிய அணி, 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர், அவ்வணி 44 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது, 37 பந்துகளில் 22 ஓட்டங்களைப் பெற்றிருந்த டேவிட் வோணர், சச்சித் பத்திரண வீசிய அடுத்த பந்தை அடிக்க முனைந்தார். ஆனால், அந்தப் பந்து, லெக் ஸ்லிப்பை நோக்கிச் சென்றது. அதைப் பிடித்த இலங்கை வீரர்கள், ஆட்டமிழப்புக்காகக் கோரினார். அந்த ஆட்டமிழப்பை, நடுவர் அலீம் தார் வழங்க மறுக்க, தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டத்தை, இலங்கை அணியின் தலைவர் டினேஷ் சந்திமால் பயன்படுத்தவில்லை.

அதைத் தொடர்ந்து சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய டேவிட் வோணர், இலங்கை மண்ணில் வைத்து, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சதம் பெற்ற முதலாவது வீரர் என்ற சாதனையையும் படைத்ததோடு, தனது அணிக்கும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.

போட்டியின் பின்னர் கருத்துத் தெரிவித்த டேவிட் வோணர், தான் 22 ஓட்டங்களுடன் இருந்தபோது, தனது துடுப்பில் பட்டே அந்தப் பந்து சென்றிருந்ததாக ஏற்றுக் கொண்டமை மாத்திரமல்லாது, அதன் காரணமாகத் தனக்கு அதிர்ஷ்டம் காணப்பட்டது எனவும் வெளிப்படையாகத் தெரிவித்தார். குறிப்பாக, இலங்கை டெஸ்ட்களில் பின்னர் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் தடுமாறிய அவருக்கு, இந்த இனிங்ஸ், முக்கியமானதாக அமைந்தது.

“சதமொன்றைப் பெறுவது, சிறப்பானது. ஆனால், என்னைப் பொறுத்தவரை, நிம்மதிப் பெருமூச்சுப் போன்றது. என்னை நான் எப்போதும் சந்தேகித்திருக்கவில்லை. எனது திட்டங்களைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தி வந்தேன். கிரிக்கெட்டில் உங்களுக்கு அதிர்ஷ்டம் வேண்டும். ஷோர்ட் லெக் திசையில் (உண்மையில் அது லெக் ஸ்லிப்) அந்தப் பந்தை நான் அடித்தேன் என நினைக்கிறேன். உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைப்பதென்பது, கிரிக்கெட்டில் அதுவும் ஓர் அங்கம். இப்போட்டியில் எனக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்தமை, அதிர்ஷ்டகரமானது” என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த வோணர், “அது, அரைவாசியான அழைப்புக் கோரிக்கை. பந்துவீச்சாளர் என்னிடம் வந்து, “அதிர்ஷ்கரமானவர், நீங்கள் அந்தப் பந்தை அடித்தீர்கள்” என்றார். நான், “ஆமாம், அதை அடித்தேன் என நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்தேன். 100 சதவீதம் நான் உறுதியாக இருக்கவில்லை. நான் அடிக்கவில்லை என விக்கெட் காப்பாளர் நினைத்தார்” என்று மேலும் தெரிவித்தார்.

In4vzqxj0y

Related posts: