இலங்கை வீரரை மிஞ்சி முதலிடத்தை பிடித்த பிரபல பாகிஸ்தான் வீரர்!

பிரபல பாகிஸ்தான் துடுப்பாட்டகாரர் டி20 போட்டிகளில் 24 முறை டக் அவுட் ஆகி டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தான் துவக்க துடுப்பாட்டகாரராக களமிறங்கி விளையாடி வந்த 26 வயதான உமர் அகமலே 24 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.
தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் லாகூர் குவாலண்டர்ஸ் அணிக்காக உமர் அக்மல் விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற பெஷாவர் ஷல்மி அணிக்கெதிரான போட்டியில் உமர் அக்மல் டக் அவுட் ஆனார்.
இந்த அவுட் மூலம் உமர் அக்மல் 24-வது முறையாக டக் அவுட்டாகி சர்வதேச அளவில் முதல் இடம்பிடித்துள்ளார். இதற்கு முன் தென்ஆப்பிரிக்கா அணியின் கிப்ஸ், இலங்கையின் தில்ஷன், மேற்கிந்திய தீவுகள் ஸ்மித் ஆகியோர் 23 முறை டக்அவுட் ஆகி இந்த மோசமான சாதனையில் முன்னிலையில் இருந்தனர். தற்போது உமர் அக்மல் அவர்களை மிஞ்சியுள்ளார்.
Related posts:
|
|