பி.சி.சி.ஐ தலைவர் பதவியில் இருந்து அனுராக் தாக்கூர் நீக்கம்!

Wednesday, January 4th, 2017

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை அப்பதவிகளில் இருந்து நீக்கி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் முக்கிய செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்கும் வகையில் புதிய நிர்வாகிகள் நடந்துகொள்ள வேண்டும் என கடந்த ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இந்த உத்தரவுக்கு மதிப்பளிக்காத இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை நிர்வாகிகள் சில முடிவுகளை தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த அத்துமீறல்களை சுட்டிக்காட்டிய மனு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையிலான அமர்வின் முன்னார் விசாரணைக்கு வந்தது.

நீதிமன்ற உத்தரவை பின்பற்றத் தவறிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை அப்பதவிகளில் இருந்து நீக்கி இந்த அமர்வு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக, உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? என்று விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் புதிய தலைவர் மற்றும் செயலாளரை தேர்ந்தெடுக்கும் பணிகளை மேற்பார்வை செய்வதற்காக பிரபல சட்ட நிபுணர் ஃபாலி எஸ். நாரிமனை நியமித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

99col8145528317_5117224_02012017_AFF_CMY

Related posts: