இரு முறை இரட்டை தங்கம் – பிரித்தானியா வீரர் மோஃபார்ராக் சாதனை!

Sunday, August 21st, 2016

பிரித்தானிய தடகள வீரர் மோ ஃபார்ராக் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஐந்தாயிரம் மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்று, தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் “இரு முறை இரட்டை தங்கம்“ வென்றவர் என்ற புகழ் பெற்றுள்ளார்.

முன்னதாக, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் லண்டன் ஒலிம்பிக்போட்டியில் வென்றதை போல இவர் ஏற்கெனவே ரியோ ஒலிம்பிக்கிலும் பத்தாயிரம் மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை நடத்துகின்ற பிரேசில் அணி கால்பந்து விளையாட்டு போட்டியில் முதலாவது தங்கப்பதக்கத்தை வென்றிருக்கின்றது.விளையாட்டு நேரம் முடிந்து வழங்கப்பட்ட ஐந்து நிமிட அதிக நேரத்தில் 1:1 என்ற கோல்கணக்கில் சமநிலை ஏற்பட்டதால், பெனால்டிக் முறைப்படி அதிக கோல் அடித்து, ஐந்து முறை உலக கால்பந்து கோப்பையை வென்ற பிரேசில் அணி வெற்றிபெற்றது.

இயற்கையாக சுரக்கின்ற டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் அதிகமாக இருப்பதால், பாலினம் பற்றி கேள்விகள் எழுந்துள்ள தென்னாப்பிரிக்க வீராங்கனை காஸ்டர் செமன்யா, மகளிர் 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறார்.

Related posts: