டி20 உலகக்கிண்ணம்: இலங்கையை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்!

Monday, March 21st, 2016

இலங்கைக்கு எதிரான உலகக்கிண்ண 20 போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கிண்ண ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும்  இலங்கை அணி மோதின.

நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக தில்ஷனும், சந்திமலும் களமிறங்கினர்.

நிதானமாக விளையாடிய தில்ஷன் நடுவரின் தவறான முடிவால் 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இலங்கையின் முக்கிய துடுப்பாட்டவீரரான சந்திமல் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இதனை அடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளது.

பெரேரா அதிகப்பட்சமாக 40 ஓட்டங்கள் குவித்தார். பத்ரி 4 ஓவர்கள் வீசி 12 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனையடுத்து 123 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய அணி 18.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

தொடக்க வீரர் பிளட்சர் அதிரடியாக விளையாடினார். அவர் 64 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 84 ஓட்டங்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்

Related posts: