மோசடி பிரிவில் சிக்குவாரா குமார் சங்கக்கார?

Monday, August 28th, 2017

குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக் கொள்ளாமல், நிதி மோசடி விசாரணை பிரிவினால் ஒன்றும் செய்ய முடியாதெனவும் அதன் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் கிரிக்கெட் போட்டிகளில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுக்களில் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான அர்ஜுன ரணதுங்க மற்றும் குமார் சங்கக்காரவுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் காணப்பட்டது.இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக, பொலிஸ் விசாரணை நிதி மோசடி விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.அதற்கமைய ஒப்படைக்கப்பட்ட விசாரணை நடவடிக்கை ஒரு குறிப்பிடத்தக்க கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இது தொடர்பில் முக்கியஸ்தர்கள் சிலரிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, அர்ஜுன ரணதுங்க, குமார் சங்கக்கார, அரவிந்த டி சில்வா போன்ற பிரபல வீரர்களிடம் இது தொடர்பில் தகவல் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கிரிக்கெட் போட்டி தொடர்பில் சூதாட்டம் நடத்திய பிரபல வர்த்தகர்கள் இருவரும் மீது தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: